Rock Fort Times
Online News

தமிழகத்தில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பில் அநீதியை கண்டித்து திருச்சியில் திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம்…!

தமிழகத்தில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், கிழக்கு மாநகர திமுக இளைஞரணி சார்பில் சின்னகடை வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிட பண்ணை முத்து தீபக் தலைமை தாங்கினார். மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் வரவேற்றார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாககிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமானமு.மதிவாணன், தலைமைக் கழக பேச்சாளர்கள் கர்ணா, விஜயலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.பொதுக்கூட்டத்தில் மாநகர செயலாளர் மதிவாணன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில்மாவட்ட, மாநகர நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மூக்கன், லீலாவேலு, நூர்கான், ஆறு சந்திரமோகன், சரோஜினி,பகுதி செயலாளர்கள் மருந்துகடை மோகன், ஏ.எம்.ஜி.விஜயகுமார், ஆர்.ஜி.பாபு மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் பகுதி இளைஞரணி அமைப்பாளர் மாரிக்கண்ணன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்