வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி வாகை சூடும்: அமைச்சர்கள் கே என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி பேச்சு…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி தேசிய பள்ளி மைதானத்தில் கலைஞர் அரங்கில் இன்று(01-09-2024) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி எப்போதும் தீரர்கள் கோட்டமாக விளங்கி வருகிறது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது. கடந்த 1996ம் ஆண்டு பிறகு அதனை திமுக கோட்டையாக மாற்றியவர் கலைஞர் கருணாநிதி. வருகிற 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றை ஆண்டு காலம் மட்டுமே உள்ளது. எனவே அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பொது பணிகளால் தொண்டர்களுக்காக பணியாற்ற முடியாத சூழல் நிலவியது. இனி தொண்டர்களின் குடும்பத்திற்காக உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திருச்சி திமுகவின் கோட்டை என்பதை வருகின்ற தேர்தலிலும் நாம் நிரூபிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற தலைவரின் இலக்கை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம். அமைச்சர் உதயநிதியின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று பேசினார். கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, கவிஞர் சல்மா, செந்தில், மாநகராட்சி துணைமேயர் திவ்யா தனக்கோடி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, குணசேகரன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.ஜி.விஜயகுமார், கொட்டப்பட்டு தர்மராஜ், பாபு, நீலமேகம், சிவக்குமார், மோகன், மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் கே.கே.கே.கார்த்திக் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் மூக்கன் நன்றி கூறினார். கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது

கூட்டத்தில் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்கு தனது வாழ்நாள் முழுவதும் போராடியவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறை பொறுப்பு வகித்தவராகவும், அடித்தட்டு மக்களை முன்னேற்றமடைய உழைத்தவருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டின் பங்குத்தொகையான ரூ.2,152 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால்தான் நிதியை விடுவிக்க முடியும் என நிர்பந்தித்து சுமார் பதினைந்தாயிரம் ஆசிரியப் பெருமக்களுக்கும் மேல் மாத ஊதியம் வழங்கிட முடியாத நிலையையும், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாத அளவிற்கான சிக்கலையும் மத்திய அரசு உருவாக்க முயற்சிக்கின்றது. எனவே, மத்திய அரசு உடனே நிதியினை விடுவிக்க வேண்டும். மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு அடுத்ததாக திருச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ஒப்புதல் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்து பெற்றுக்கொடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும். இந்நூலகம் அமைவதற்கு முதன்முதலில் முன்னெடுப்பை தொடங்கிய மாவட்டக் கழகச் செயலாளர் துறை சார்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.