திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் பரிசு ! தேர்தலில் ஸ்கோர் செய்யும் மண்ணச்சநல்லூர் கதிரவன் !!
வருகிற ஏப்ரல் 23ம்தேதி நடைபெற இருக்கிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான கூட்டணிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மாநிலம் முழுவதும் உள்ள கட்சி உடன்பிறப்புகள் ஏகபோக குஷியில் இருக்கிறார்கள். அதிலும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளில் ஒன்றான மண்ணச்சநல்லூரில் சிட்டிங் எம்.எல்.ஏ வான சீ.கதிரவனுக்கே கட்சித் தலைமை மீண்டும் ‘சீட்’ வழங்கும் எனத் தெரிகிறது. இதனால் தொகுதியில் உள்ள இவரது ஆதரவாளர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கின்றனர். இவர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளை இப்போதே குளிர்விக்க தொடங்கிவிட்டார் கதிரவன். அந்தவகையில் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட முசிறி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காட்டுக்குளம் கணேசன் மற்றும் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு புதிய “ஸ்கார்பியோ என்” மாடல் காரை பரிசாக அளித்து அவர்களுக்கு “ஸ்வீட் அட்டாக்” கொடுத்துள்ளார் கதிரவன்.

திருச்சி மாவட்டத்தில் அமைச்சர்களாக இருக்கும் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்களாக இருக்கும் எஸ்.ரகுபதி, சி.வீ.மெய்யநாதன், பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற கரூர் செந்தில்பாலாஜி ஆகியோரே இதுபோன்ற கட்சி நிர்வாகிகளை குளிர்விக்கும் வேலைகளை செய்யவில்லை. ஆனால், மண்ணச்சநல்லூர் கதிரவன் திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ காரை பரிசாக கொடுத்துள்ளார். இது கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

Comments are closed.