திமுகவின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருபவர் சி.வி.கணேசன். இவரது மருமகன் பொன்னர். இவர் தற்போது திருச்சி கே.சாத்தனூர் பகுதியில் வசித்து வருகிறார். திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த இவர், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திமுகவில் இருந்து அதிமுகவிற்கு அணி மாறிய அமைச்சர் சி.வி.கணேசனின் மருமகன் பொன்னருக்கு மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
Comments are closed.