டெல்டா பகுதிக்கு உட்பட்ட திமுக பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… திருச்சியில் 30-ம் தேதி நடக்கிறது!
திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் டெல்டா பகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் “ஓரணியில் தமிழ்நாடு” தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.