‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சியில் நாளை திமுக பொதுக்கூட்டம்…!
பொருளாளர் டி.ஆர்.பாலு பங்கேற்பு...!
திருச்சி புத்தூரில் நாளை திமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இதுதொடர்பாக
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என்கின்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில் நாளை (17-02-2024) சனிக்கிழமை மாலை 6 மணியளவில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் நாடாளுமன்ற மாபெரும் திமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக் கூட்டத்தில் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, கழக முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், கழக முன்னணியினரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.