சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி 3வது மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை மாவட்ட செயலாளர் சேகர், பகுதி செயலாளர்கள் இ.எம்.தர்மராஜ், மோகன், ராஜ்முகமது , ஏ.எம்.ஜி. விஜயகுமார், பாபு, மணிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.