102 -வது பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதி சிலைக்கு திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ தலைமையில், மேற்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ.அன்பில் பெரியசாமி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஸ்ரீரங்கம் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், பொருளாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் கமால் முஸ்தபா, மோகன்தாஸ், கவுன்சிலர் நாகராஜ், கவுன்சிலர் காஜாமலை விஜய், ராம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், வர்த்தக அணி தொழிலதிபர் ஜான்சன்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், மாநகர
துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, வழக்கறிஞர் அந்தோணி, உத்தமர் சீலி ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத், வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், பி.ஆர்.பி .பாலசுப்ரமணியன், வாமடம் சுரேஷ், தனசேகர், கவுன்சிலர்கள் கவிதா செல்வம், விஜயா ஜெயராஜ், ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,நிர்வாகிகள் தென்னூர் அபூர்வமணி,
எம்ஆர்எஸ் குமார், ராஜ்குமார், அயூப்கான், சர்ச்சில், ரஜினி கிங் உட்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.