Rock Fort Times
Online News

திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!

திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக சட்ட விதிப்படி, திமுக கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத் திறனாளிகள் அணி தலைவராக ரெ.தங்கம், செயலாளராக டி.எம்.என்.தீபக் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்