திமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது ! சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு !
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு யார் யாரோ எல்லாம் திமுகவை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது. நெருக்கடி நிலைக்காலத்தில் தலைவர் கலைஞர் முதல் தொண்டர்கள் வரை பல கொடுமைகளை அனுபவித்தனர். எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருப்பவர்கள் திமுகவினர். அதனால்தான் இன்றைக்கும் கட்சி கம்பீரமாக இருக்கிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளனர் எனப் பேசினார்.

Comments are closed.