Rock Fort Times
Online News

திமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியம்: தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்…!* முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் இன்று(பிப்.19) திமுகவில் இணைந்தது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தை தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக! வருக!! என வரவேற்கிறேன். தங்களது நல்வரவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்