தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது. காங்கிரசுக்கு 28, முஸ்லிம் லீக்-2, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி-2, மனிதநேய மக்கள் கட்சி- 2, ம.தி.மு.க- 4, இந்திய கம்யூனிஸ்டு-5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-5 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தநிலையில் இன்று (24-03-2026) விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தே.மு.தி.க., மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனை தொடர்ந்து இன்று மாலை தேமுதிக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர். தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.