தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் திமுக, அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தாலும் கூட்டணி தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் உள்ளார். இது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தலைமைக் கழகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டணி உறுதி செய்யப்படாததால் விருப்ப மனு அளிக்க நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தேமுதிக தலைமை அலுவலகம் வெறுச்சோடி காணப்படுகிறது இது கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.