அரசின் நலத்திட்டங்களை அறிந்து பயன் பெரும் வகையில், திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற ஜூன் 21ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. திருநங்கைகளுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்கும் பொருட்டு, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய, பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் தொடங்க மானியத் தொகை, கல்வி உதவித்தொகை, சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆதார் திருத்தம், ஆயுஷ்மான் பாரத் அட்டை இலவசத் தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. திருநங்கைகள் நலவாரியம் மற்றும் திருநங்கைகளுக்காகச் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெறும் வகையில், திருநங்கைகளுக்கான நடைபெறும் சிறப்பு முகாமில் திருச்சி மாவட்ட திருநங்கைகள்தவறாமல் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.