Rock Fort Times
Online News

இறந்து போனவரின் உடலை பெறுவதில் 2 மனைவிகள் இடையே சர்ச்சை !

முதல் மனைவியிடம் ஒப்படைக்க முடிவு...

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூரை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 45). இவரது மனைவி லதா (34). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த
8 வருடத்திற்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றதால் கோடீஸ்வரன்கடலூரில் வசித்து வந்தார். இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரை  கடந்த 8 மாதத்திற்கு முன்பு கோடீஸ்வரன் 2- வது திருமணம் செய்து கொண்டார். அவருடன் சில நாட்களே வாழ்ந்த கோடீஸ்வரன், சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் கோடீஸ்வரன் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்து சாந்தியோடு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.கோடீஸ்வரனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோடீஸ்வரன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி சாந்தி வீட்டிற்கு கோடீஸ்வரன் வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்படவே அவரை 29ம் தேதி அதிகாலை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மனைவி லதா, கணவர் கோடீஸ்வரனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க கோரி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தார். இதனால், இறந்து போன கோடீஸ்வரனின் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதுதொடர்பாக இன்று காலை திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. தீவிர விசாரணைக்கு பின்பு முதல் மனைவியின் வாரிசுகளிடம் உடலை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பேரில் பிரேத பரிசோதனை முடிந்து கோடீஸ்வரன் உடல் முதல் மனைவியின் வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்