Rock Fort Times
Online News

திருச்சி, தெப்பக்குளம் தரைக்கடை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதில் பாரபட்சம்: வியாபாரிகள் தர்ணா போராட்டம்!

திருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றிலும் ஏராளமான தரைக் கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வந்தது. அதன்படி இன்று(14-11-2025) தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தரைக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அவர்களுக்கு ஹோலிகிராஸ் கல்லூரி அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக இடத்தில் மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 191 கடைகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது பழைய நகராட்சி அலுவலகத்தில் 148 கடைகள் மட்டுமே செயல்படமுடியும், இதில் வெண்டிங் கமிட்டியை சேர்ந்த தொழிற்சங்கத்தில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடை வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் உரிய முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்யாமல் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்தும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் தெப்பக்குளம் காந்தி சிலையின் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அனைவருக்கும் மாற்று இடம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களுக்கு உரிய மாற்று இடம் வழங்காவிட்டால் தங்களது போராட்டத்தை தீவிரப் படுத்துவோம், வியாபாரிகளின் வாக்குகளை பெற்றுவிட்டு எங்களை கண்டுகொள்ளாமல் உள்ள அமைச்சர்கள் வீடுகளின் முன்பு அமர்ந்து போராடுவோம் என்று தெரிவித்து கலைந்து சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்