Rock Fort Times
Online News

ரோந்து பணியில் பாரபட்சம் : திருவெறும்பூர் போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்…!

திருச்சி எஸ்.பி.நடவடிக்கை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் பிலால் என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், திருவெறும்பூர் உட்கோட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்பி வீ. வருண்குமாா் ஐபிஎஸ்சிடம் புகார் சென்றதை அடுத்து ஏட்டு பிலாலை திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த மாறுதல் உத்தரவு திருவெறும்பூர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்