Rock Fort Times
Online News

திருச்சி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிப்பு….

வருமான வாித்துறை சோதனை...

திருச்சி மருதாண்ட குறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 12 மணியளவில் திருச்சி, கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இருந்து   வந்த 15-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2017 -ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.30 லட்சத்திற்கு மேலாக பத்திர பதிவு செய்தவர்கள் யார்?, அவர்கள் வருமான வரி செலுத்தி இருக்கிறார்களா? என்று வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை இன்று  நிறைவு பெற்றது. சோதனையின் போது ஐந்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் எவ்வித தடையும் இன்றி பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டது.  திருச்சி, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்