Rock Fort Times
Online News

டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத கால தாமதமாக வந்தவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம்…! (வீடியோ இணைப்பு)

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனகாவலர் ஆகிய பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று( ஜூலை 12) நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 196 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், காலை 9 மணிக்கு பிறகும் சிலர் வந்த வண்ணம் இருந்தனர்.அவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்தின் முன்புற கேட் இழுத்து மூடப்பட்டது. இதனால், அவர்கள் கேட்டின் வெளியே நீண்ட நேரம் சோகமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்குள் தங்களை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டும் தேர்வு மைய அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்