Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட்டில் திகு… திகு… அரிவாள் வெட்டில் முடிந்த கூலித்தகராறு

திருச்சி, வரகனேரி பகுதியை சேர்ந்தவர் ரெட்டமலை. இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை பணி தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.
அவருடன் அவருடைய சகோதரர் மகனான மதன் குமாரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி கூலிப்பணம் பிரிப்பதில் ரெட்டமலைக்கும் மதன்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மதன் குமார் அரிவாளால் ரெட்டமலையின் இடது கையில் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த இரட்டைமலை, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் முழுமையாக சிகிச்சை பெறாமல் மருத்துவமனையில் இருந்து வந்து தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில் சரியாக சிகிச்சை மேற்கொள்ளாததால், வெட்டப்பட்ட இடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை அவருடைய உறவினர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அரிவாள் வெட்டில் ஈடுபட்ட மதன் குமாரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்