Rock Fort Times
Online News

கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை…!

தேவையற்ற நெரிசலை தவிர்க்க, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார்.
கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலில் தற்போது ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ளது. ஐயப்பனை தரிசிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருகிறார்கள். அவர்கள் ஐயப்பனை தரிசிப்பதற்காக செல்லும்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் சபரிமலையில் அதிக நெரிசலை தவிர்க்கலாம். சபரிமலையில் நேற்று முன்தினம் வரை 12 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனத்துக்கு சென்றுள்ளனர். கடந்த 15-ம் தேதி முதல் 1.95 லட்சம் பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரோ, பின்னரோ வந்துள்ளனர். ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தை பின்பற்றாமல் தரிசனத்துக்கு வருவோர் எண்ணிக்கை கடந்த 15-ம் தேதி முதல் அதிகரிப்பதை இது குறிக்கிறது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தால், சிரமம், நெரிசல் இன்றி, சுமுகமாக சுவாமி தரிசனம் செய்யலாம் என கேரள மாநில காவல் துறை வலியுறுத்தியுள்ளது. இதை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பதினெட்டாம் படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும். பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லும்போது கூட்டத்தின் அளவை கண்டு அதற்கேற்ப செல்லவும். இலவச உதவி எண் ‘14432’-ஐ பயன்படுத்தி எந்தவித உதவிக்கும் காவல் துறையை அணுகலாம். சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். குழந்தைகள், வயதான பெண்கள் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்பது உட்பட 17 அறிவுரைகளை கடைபிடிக்குமாறு டிஜிபி வலியுறுத்தி உள்ளார். வரிசையில் முந்தி செல்ல தாவி குதிக்க கூடாது. ஆயுதங்கள், வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது என்று செய்யக்கூடாதவை என மேலும் 17 அறிவுரைகளையும் டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கி உள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்