Rock Fort Times
Online News

திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம்-மேலும் 5 பேர் கைது..!

திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 2 பேர் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கினர். ஆனால் பணத்தை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தவில்லை. இதனால், அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து கொடுக்க மாவட்ட கலெக்டருக்கு வங்கி நிர்வாகம் மனு கொடுத்ததை தொடர்ந்து கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில் சொத்துகளை ஜப்தி செய்து வங்கி வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து திருச்சி மேற்கு தாலுகா மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் 4 வங்கி ஊழியர்கள் காஜாமலை லூர்துசாமி காலனியில் உள்ள அடமான சொத்தை ஜப்தி செய்ய சென்றனர். அப்போது அந்த இடத்தின் உரிமையாளர்கள் 25-க்கும் மேற்பட அடியாட்களை வரவழைத்து மண்டல துணை தாசில்தாரையும், வங்கி ஊழியர்களையும் தாக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 5 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவத்தில் துணை தாசில்தார் மற்றும் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரியும், பணி பாதுகாப்பு வேண்டியும் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் கடந்த
2 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கே.கே நகர் போலீசார் முதல் கட்டமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்