துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், துணை முதல்வர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.