துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.கழக இளைஞர்அணி செயலாளரும், துணை முதல்- அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை ( 6-11-2024) புதன்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் கார் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு சமயபுரம் டோல் பிளாசாவை அடுத்து இருங்களூர் கைகாட்டி அருகில் கழக முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், மாவட்ட செயலாளர்கள் க.வைரமணி, ந.தியாகராஜன் ஆகியோர் முன்னிலையிலும் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து உற்சாக வரவேற்பு அளித்திட வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.