Rock Fort Times
Online News

பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் துறை ரீதியான நடவடிக்கை… * எச்சரித்தது தமிழ்நாடு அரசு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ( ஜூலை 9 ) பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலர் எச்சரித்துள்ளார். சம்பள நிறுத்தம், துறைரீதியான நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்