Rock Fort Times
Online News

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பொங்கலுக்கு 1000 ரூபாய் வழங்க கோரியும் திருச்சியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்…!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இன்று(06-01-2025) தமிழகம் முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கவும், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட துணை செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். மகளிர் அணி செயலாளர் இந்துமதி, மகளிர் அணி துணை செயலாளர் பெரியக்கா ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கழக ஐடிவிங் செயலாளர் செந்தில்குமார், கழக தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, தொழிற்சங்கம் திருப்பதி , மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் வி.கே.ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகர துணைச் செயலாளர் ராஜ்குமார், மகாமுனி, காளியப்பன், செயற்குழு உறுப்பினர்கள் ராமு, பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயசுரேஷ், ஐயப்பன், பெருமாள், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் தமிழன், தமிழ்ச்செல்வன், செல்லதுரை, அன்வர் அலி, முத்துக்குமார், கதிர், வைர பெருமாள், கோபி, செந்தில்குமார், ராஜா மணி, மாஸ் விஜி, மனோஜ், முரசு ரமேஷ், பாரிவள்ளல் சையது முஸ்தபா, சேட்டு மற்றும் பகுதி செயலாளர்கள் மணிகண்டன், ஷங்கர், அலெக்சாண்டர், மோகன், வெங்கடேசன், குமார், அருள்ராஜ், மாரிசன், பரமசிவம், முத்துக்குமார், சிங்காரவேல், மகாகிருஷ்ணன், பார்த்தசாரதி, கோபால், ஆபிரகாம், அகஸ்டின், அமுதப்பிரியா, சரளா, கிருபா, சுதா, இந்திராணி, நிஷாந்தி, நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்