திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள்; அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும்; லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும்,
திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் 21.6.2023 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக , கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.