திருச்சிக்கு வருகை தரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை..
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.,
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ( 08.06.2023 ) திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு கிளை கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார் .
Comments are closed, but trackbacks and pingbacks are open.