திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் மோடி வரும் 24 ம் தேதி கேரள மாநிலம் கொச்சி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வரையில் பயணம் மேற்கொள்கிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு பா.ஜ.க ஆதரவு பெற்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்கும் அவர், பேரணி ஒன்றிலும் கலந்து கொள்கிறார். மறுநாள், வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். இந்நிலையில், கேரள மாநில பா.ஜ.க தலைவர் சுரேந்திரனுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. மர்ம நபர் அனுப்பிய அந்த கடிதத்தில், கேரளாவில் பிரதமர்மோடி படுகொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் கடந்தவாரம் சுரேந்திரனுக்கு வந்துள்ளது. இது குறித்து அவர் டிஜிபி அனில் கன்ட்டிடம் புகார் அளித்தார். பிஎப்ஐ அமைப்பிற்கு மத்தியஅரசு தடை விதித்துள்ள நிலையில், மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
