திருவெறும்பூரில் தினசரி உழவர் சந்தை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம், அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை!
சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி க்கு உட்பட்ட கணேஷ் நகர், உய்யகொண்டான் வாய்க்கால் கரைப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தில் திருவெறும்பூரை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி உழவர் சந்தை ஒன்றை அமைத்து தர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

Comments are closed.