வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அந்தப் புயலுக்கு “தேஜ்” என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இரு தீவிர புயலாக வலுப்பெற்று ஏமன் ஓமன், கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும். இன்று (22-10-2023) வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்றார். புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக இந்த பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.