மோன்தா புயல்’ உருவாக வாய்ப்பு இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஆந்திராவை நோக்கி நகரும் ‘மோன்தா’ புயலின் தாக்கத்தால் சென்னை, வடக்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை தயாராக இருப்பு வைக்க அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறோம். நடப்பாண்டில் பருவமழை அதிகமாக பெய்யும் என எச்சரித்துள்ளதால் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்துள்ளோம். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கரைக்கு திரும்ப அறிவுறுத்தி உள்ளோம். அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகிறோம். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கெடுப்பு முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.