திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஜூன் 25ம் தேதி திருச்சி மண்டல அளவிலான வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை வருகிற 18-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் – பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு கணக்கு, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார்களுக்கு முழு விவரத்தையும், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதையும் இணைத்திட வேண்டும். கோட்ட அளவில் ஏற்கெனவே மனுகொடுத்து, அதற்குரிய அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்ப வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. குறைகளை, அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம், ஜோ.பிரதீப்குமார், உதவி இயக்குநர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம் (தமிழ்நாடு), திருச்சி -620001 என்ற முகவரிக்கு, தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ‘அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜூன் 2024’ என தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகாமில் நேரிலோ அல்லது வலை செயலிகள் மூலமாகவோ பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431- 2419523 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் தி. நிர்மலாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.