Rock Fort Times
Online News

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கார் டிரைவர் என்று கூறி நண்பர்களுடன் சேர்ந்து காதலியை சீரழித்த கொடூர காதலன்: திருச்சி எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்கிற சிலம்பரசன் காதலித்ததாக தெரிகிறது. கடந்த 13-04-2024ம் தேதி அந்த கல்லூரி மாணவியை சந்தித்த சிலம்பரசன், உன்னிடம் தனியாக பேச வேண்டும் என இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிலம்பரசனின் நண்பர்கள் நான்கு பேர் இருந்துள்ளனர். அப்போது ஐந்து பேரும் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் ஆ னார். இதனை அறிந்த சிலம்பரசன்  அந்த மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைக்க செய்துள்ளார். மேலும், தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும், இல்லையென்றால் உனது வீடியோவை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என சிலம்பரசன் அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மகளின் உடலில் மாற்றம்

தெரிந்ததை அடுத்து  அவரின் தாய் விசாரித்துள்ளார்.  அப்போது நடந்த சம்பவத்தை தாயிடம் கூறி அந்த கல்லூரி மாணவி கதறி அழுதார். இதனால், பதறித் துடித்த மாணவியின் தாய் திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு மகளுடன் வந்து எஸ் பி வருண்குமாரிடம் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறேன். சனி, ஞாயிறு மட்டும் வீட்டுக்கு வருவேன். அப்போது என்னை காதலிப்பதாக சிலம்பரசன் கூறி பேசி பழகினான். பின்னர் ஒரு நாள் என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவனும், அவனுடைய நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து என் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள். அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறான். மேலும், அவன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம், கார் டிரைவராக பணிபுரிவதாக கூறி என்னை மிரட்டுகிறான் என்றார்.

இதுதொடர்பாக அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது அப்படி யாரும் தங்களிடம் டிரைவராக பணி புரியவில்லை என மறுத்தனர். தற்போது பணிபுரியும் இடங்களில், மருத்துவமனைகளில், என்சிசி முகாம்களில் பெண்கள் மற்றும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். மற்றொரு சம்பவமாக தற்போது திருச்சியில் கல்லூரி மாணவியை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். அவர்களை சும்மா விடக்கூடாது. அவர்கள் ஐந்து பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகார் மீது திருச்சி எஸ் பி வருண்குமார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

****

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்