Rock Fort Times
Online News

தெலுங்கர் குறித்து விமர்சனம்: நடிகை கஸ்தூரி மீது உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார்…!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்த அகில இந்திய போயர் மகளிர் முன்னேற்ற கழகம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி உப்பிலியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.  அதில், அகில இந்திய போயர் மகளிர் முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில் போயர் மகளிர் அல்லாமல் அனைத்து தெலுங்கு பேசும் மகளிர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில்  நடிகை கஸ்தூரி பேசுகையில், தமிழ்நாட்டில் வாழும் அனைத்து தெலுங்கு பேசும் மக்களை பற்றியும் தவறான, பொய்யான, தரக்குறைவான விமர்சனங்களை பொதுவெளியில் பேசி உள்ளார். அவரது பேச்சின் காரணமாக அனைத்து தெலுங்கு பேசும் மக்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு அல்லாத மக்களால் பேசும் பொருளாக ஆக்கப்பட்டு மிகவும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறோம்.  மேலும் எங்களது குழந்தைகள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் மிகுந்த கேள்விக்கும், அவமான பேச்சுக்கும் உள்ளாகி வருகின்றனர். ஆகவே, நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 916

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்