திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ஆஞ்சநேயர் கோவில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மேற்கு கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இடத்தில், எவ்வித அனுமதியும் இல்லாமல் கோவில் கட்டப்படுவதாக திருச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை நீதிபதிகள் இன்று வழக்கை விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியர் அலுவலக உள்ளே அரசு நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்படுவதற்கான புகைப்படங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள், இது குறித்து உள்துறை செயலாளர் , திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
Comments are closed.