Rock Fort Times
Online News

திருச்சி துவாக்குடி அருகே கோர்ட் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- தப்பிய 2 பேருக்கு வலை…!

திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷர்புதீன். இவரது மகன் முகமதுஉசேன் (35). இவர் திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் தனது குழந்தையை வைத்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக போதையில் மோதுவது போல் இரண்டு பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களை ஏன் இப்படி வருகிறீர்கள் என முகமது உசேன் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முகமது உசேனின் கை மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில், பலத்த காயமடைந்த முகமது உசேனை அப்பகுதி மக்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த தகவலின்பேரில் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கோர்ட் ஊழியரை வெட்டிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்