திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தேவானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி (65) மற்றும் அவரது மனைவி நல்லம்மாள் (55) ஆகியோர், வீட்டின் முன்புற விட்டத்தில் உள்ள இரும்பு குழாயில் இன்று(நவ.12) தூக்கில் சடலமாக தொங்கினர். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தா.பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மகன் வீரபாண்டி பெற்றோரைக் கவனிக்காமல் தனியாக வாழ்ந்ததாலும், அதனால் ஏற்பட்ட விரக்தியால் தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதிய தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்- மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் முசிறியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.