நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் கீழ் 1 சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனம், 15 வது நிதிக்குழு நிதியின் கீழ் 4 மழை நீர் வடிகால் தூர் வாரும் வாகனங்கள், 5 சிறிய ரக புதை வடிகால் அடைப்பு நீக்கும் வாகனங்கள் என மொத்தம் ரூபாய் 3.65 கோடி மதிப்பிலான 10 வாகனங்களை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இன்று (16.04.2023) தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப. அவர்கள், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, நகரப் பொறியாளர் சிவபாதம்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார், முக்கிய பிரமுகர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,
அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.