திருச்சி, கிராப்பட்டி மேம்பாலத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் வழிப்பறி * போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த கோரிக்கை
சேலம் மாவட்டம், சூரமங்கலம், செலந்தன்பட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவர், சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். திருச்சியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் பஸ்சில் இருந்து இறங்கி திருச்சி கிராப்பட்டி ரெயில்வே பாலம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மர்ம நபர் இவரை கத்தியால் தாக்கிவிட்டு இவரிடம் இருந்த ரூ.1000 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் எ. புதூர் போலீசார் வழக்கு பதிந்து திருச்சி, கம்பரசம்பேட்டை, பெரியார் நகரைச் சேர்ந்த காக்கா சூரியா (19) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்திலிருந்து கிராப்பட்டி மேம்பாலம் வரை இதுபோன்று அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் தான் அதிகளவு வழிப்பறி நடக்கின்றன. பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், வெளியிடங்களுக்கு சென்று விட்டு வீடு திரும்புபவர்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த பால பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.