Rock Fort Times
Online News

தொடர்ந்து பயமுறுத்தும் கொரோனா

இந்தியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 1590 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டு முதல் 200 -க்கும் மேற்பட்ட உலக நாடுகளை புரட்டி போட்டது கொரோனா எனும் உயிர் கொல்லி வைரஸ். இதை தொற்று நோயாகவே உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் இறந்தனர். அது போல் மருத்துவமனையில் சேர்க்க இடம் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்தியாவில் சடலங்களை எரிக்கவோ புதைக்கவோ நாள்கணக்கில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சில சடலங்கள் கங்கையில் வீசப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அது போல் வெளிநாடுகளில் குவியல் குவியலாக சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில் உலக நாடுகள் கொரோனாவை வெல்ல சிறந்த ஆயுதம் தடுப்பூசி என கருதியது. இதையடுத்து இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன. அதை மக்கள் இரு தவணைகளாக செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. அது போல் அரசு இலவசமாகவே இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியது. பின்னர் மூன்றாவது பூஸ்டரும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் இந்தியாவில் முதல் மற்றும் 2 ஆவது அலைதான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் மூன்றாவது அலை அந்தளவுக்கு பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை. எனவே கொரோனா தொற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவே இருந்தது. எனினும் எச்3 என்2 எனும் ப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவியது. இதன் பாதிப்புகளும் அதிகமாகவே இருந்தன. இது ஒரு புறம் இருக்க தற்போது கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. 146 நாட்கள் கழித்து இன்றைய தினம் இந்தியாவில் ஒரே நாளில் 1590 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருந்தன. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 6 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,30,824 ஆக உயர்ந்துள்ளது. அந்த 6 பேரில் 3 பேர் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தலா ஒருவர் கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். தினசரி பாசிட்டிவிட்டி ரேட் 1.33 சதவீதமாக உள்ளது. வாரந்தோறும் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 1.23 சதவீதமாகும். புதிதாக கொரோனா கேஸ்கள் உயர்ந்துள்ளதால் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 4,47,02,257 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,41,62,832 ஆக உள்ளது. அது போல் இறப்பு எண்ணிக்கை என்பது 1.19 சதவீதமாகும். இதுவரை 220.65 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்