பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த பிருத்திகை வாசன் என்பவர் கடந்தாண்டு வழக்கு ஒன்றில் சிக்கி பெரம்பலூர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இளம்ராஜா ( வயது 36 ) என்பவர் கைதி பிருத்திகை வாசனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் மருத்துவமனையில் நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் காவலர் இளம்ராஜா மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Comments are closed.