Rock Fort Times
Online News

திருச்சியில் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸ்: ரஜினி ரசிகர்கள் ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் உலகமெங்கும் இன்று(ஆகஸ்ட் 14) வெளியானது. திருச்சியில் 8 திரையரங்குகளில் ‘ரிலீஸ்’ ஆனது. ‘தலைவர்’ படம் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முனீஸ்வரன் கோவிலில் வழிபாடு செய்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்திக்கொண்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள சோனா- மீனா திரையரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனர்களுக்கு பூக்களை தூவினர். அதேபோல மலைக்கோட்டை பகுதியில் உள்ள எல்.ஏ திரையரங்கின் முன் மேடை அமைத்து ஆடிப்பாடி கொண்டாடினர். இதுகுறித்து ரசிகர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, ரஜினியை காணவே முதல் நாள் முதல் காட்சிக்கு வந்துள்ளதாகவும் இப்படம் மாபெரும் வெற்றி அடையும் என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்