திருச்சி கே.சாத்தனூரில் இயங்கிவரும் ஆச்சாரியா சிக்ஷா மந்திர் பள்ளியில், மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “லஞ்ச் பாக்ஸ்” எனும் சமையல் போட்டி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, திருச்சி கோர்ட்யார்ட் ஹோட்டலின் செஃப் ஜெகதீஷ் கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் முதல்வர் எஸ்.தங்கஉஷா தலைமை தாங்கினார். இதில், 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு கேரட் லட்டு, ஏபிசி ஜூஸ் எனப்படும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ், சாமை அரிசி சாம்பார் சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை சமைத்து அசத்தினர். இப்போட்டியில் முதல் பரிசு தமிழ் செல்விக்கும், இரண்டாவது பரிசு பக்ரினா ஸ்ரீ என்பவருக்கும், மூன்றாவது பரிசு ஸ்ரீதேவி என்பவருக்கும் வழங்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகளுக்கு பதிலாக, இங்கு சமைத்து காட்டப்பட்ட பல்வேறு உணவுகள் இருந்ததாகவும், தங்களது குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை சமைத்துக் கொடுக்க இந்நிகழ்ச்சி வசதியாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆச்சாரியா சிக்ஷா மந்திர் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.