அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த கலைமணி மனைவி மலர்விழி(35), மேற்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி(40). இவர்கள் இருவரும் கடந்த 22.10.22 அன்று உணவு காளான் பறிக்க அப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் காட்டுக்கு சென்றனர். அப்போது, கழுவந்தோண்டி ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் பால்ராஜ்(39) மேற்கண்ட இருவரையும் கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தாலிச் செயின்களை பறித்துச் சென்றார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து பால்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா, குற்றவாளி பால்ராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பால்ராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments are closed.