Rock Fort Times
Online News

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 52 பேர் கைது…!

திமுக துணைப் பொதுச் செயலாளரும், மேல்-சபை எம்பியுமான திருச்சி சிவா, முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக
கூறப்படுகிறது. இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் காமராஜர் பேரவை மாவட்ட தலைவர் சிவாஜி சண்முகம், தமிழ்நாடு- பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் கள்ளத்தெரு குமார், வெல்லமண்டி பாலசுப்பிரமணியன், அண்ணா சிலை விக்டர், காங்கிரஸ் கோட்டத் தலைவர்கள் ஜெயம் கோபி, சம்சுதீன், மார்க்கெட் மாரியப்பன், தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, நிர்மல்குமார், நாச்சி குறிச்சி அருண் பிரசாத், சண்முகம், சகாயராஜ், சிவகிரி
உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் உள்ள வ.உ.சி சிலை முன்பு திரண்டனர். பின்னர் கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா எம்.பி வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், வக்கீல் சரவணன்,சிவாஜி சண்முகம் உள்ளிட்ட 52 பேரை கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்