Rock Fort Times
Online News

தொடர் கனமழையால் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்…!

டெல்டா மாவட்​டங்​களில் நவ. 28-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்​தது. இதனால் தாழ்​வான பகு​தி​களில் மழைநீர் தேங்​கியது. மேலும், குடி​யிருப்​பு​களுக்​குள்​ளும் மழைநீர் புகுந்தது. தஞ்சை மாவட்​டத்​தில் 15,000 ஏக்​கர், நாகை​யில் 60,000 ஏக்​கர், திரு​வாரூரில் 75,000 ஏக்​கர், மயி​லாடு​துறை​யில் 55,000 ஏக்​கர் என மொத்​தம் 2.05 லட்​சம் ஏக்​கர் பரப்​பளவி​லான சம்​பா, தாளடி பயிர்​கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்​துள்​ளன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், பல்வேறு இடங்​களில் வடி​கால் வாய்க்​கால்​களை தூர் வாராத​தால் மழைநீர் வடிய முடி​யாமல் பயிர்​கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு விரைவில் கணக்கெடுப்பு நடத்தி எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்