Rock Fort Times
Online News

தொடர் விடுமுறை  : தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்…

கட்டட கலைக்கும் , சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் தஞ்சை பெரியக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக உள்ளது.‌ இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலின் எழில்மிகு அழகை காண நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து உள்ளனர். வேளாங்கண்ணி பேராலயத்திற்கு செல்பவர்கள், சபரிமலைக்கு செல்பவர்கள் தஞ்சை வழியாக கடந்து செல்லும் போது பெரியக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்து இருந்து பெருவுடையாரை வழிப்பட்டு செல்கின்றனர்.

ரோட்டுக்கடையில் நயன்தாராவுக்கு BIRTHDAY TREAT வைத்த விக்னேஷ் சிவன்

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்