கூட்ட நெரிசலை தவிர்க்க காரைக்கால், தஞ்சாவூர், பெங்களூரு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், கூட்ட நெரிசலை குறைக்க திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயில் ( வண்டி எண் 04690), காரைக்கால் – தஞ்சாவூர் பயணிகள் ரயில் (06457), தஞ்சாவூர் – திருச்சி பயணிகள் ரயில் (06683), எஸ்எம்விடி பெங்களூரு – காரைக்கால் மெயின் விரைவு ரயில் (16529), காரைக்கால் – எஸ்எம்விடி பெங்களூர் மெயில் விரைவு ரயில் (16530) ஆகிய ரயில்களில் வருகிற 10, 11, 12 ம் தேதிகளில் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளன. மேலும் ஸ்ரீகங்கா நகர் – திருச்சி, ஸ்ரீகங்கா நகர் ஹம்சாபர் அதிவிரைவு ரயில்களில் (22497, 22498) வருகிற 30-ம் தேதி வரை ஒரு குளிர்சாதனப் பெட்டி (ஏசி த்ரி டயா) தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. இதேபோல, ஜோத்பூர்- திருச்சி, ஜோத்பூர்- ஹம்சாபர் அதிவிரைவு ரயில்களில் (20481, 20482) வருகிற 25 ஆம் தேதி வரை ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.