பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் பறக்க விட இருந்த கருப்பு பலூன்கள் பறிமுதல்! எஸ் சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமாருக்கு வீட்டுச் சிறை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் எஸ்சி பிரிவு மாநில தலைவராக இருப்பவர் ரஞ்சன் குமார்.பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு நிற பலூன்களை பறக்க விட முடிவு செய்தார்.அதற்கு போலீசாரிடம் அனுமதி கோரினார். அனுமதி மரித்த போலீசார் ரஞ்சித் குமார் தங்கி இருந்த அப்பார்ட்மெண்டில் உள்ளே இதனால் அங்கு மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ரஞ்சன் குமாரை வீட்டு சிறையில் வைத்த போலீசார்பறக்க விடப்பட இருந்த 320 கருப்பு பலூன்களை காங். பிரமுகர் ரஞ்சன் குமார் வீட்டிலிருந்து பறிமுதல் செய்தனர். அதேசமயம் இந்த விஷயம் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தொண்டர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தனர். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த ரஞ்சன் குமார் கடைசியில் முகநூல் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு யாரும் என் வீட்டு பக்கம் வந்து விடாதீர்கள் அப்பார்ட்மெண்டில் இருந்து எனது வீட்டை காலி பண்ண சொல்லி விடுவார்கள் அதேசமயம் போலீசார் நாளை(இன்று )காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் முன்பு கருப்பு கோடி காட்ட அனுமதி அளித்துள்ளனர் அதனால் யாரும் என் வீட்டு பக்கம் வர வேண்டாம் நாளை கருப்புகொடிபோராட்டத்தை திறம்பட நடத்திக் காட்டுவோம் என்று முகநூல் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்
.அதேசமயம் ரஞ்சன் குமார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு தொடர்ந்து மக்களை ஏமாற்றி
வரும் நிலையில், சமீபத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவங்களை தனது பணக்கார
நண்பர்களுக்கு தாரை வார்த்து, பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும்
சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். மோடி மற்றும் அவரது நெருங்கிய
நண்பர் அதானி ஆகியோரின் கூட்டுக்கொள்ளை குறித்து பாராளுமன்றத்தில் தொடர்
கேள்விகளை எழுப்பிய தலைவர் ராகுல் காந்தியை எதிர்கொள்ள முடியாமல் சூரத்
நீதிமன்ற அவதூறு வழக்கின் மூலம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
மற்றும் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் இருக்கும்போதே அவரது பாராளுமன்ற
உறுப்பினர் பதவியை பறித்து ஜனநாயகத்தை அதலபாதாளத்தில் குழிதோண்டி
புதைத்திருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இரண்டுநாள் பயணமாக தமிழகம்
வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் திரு ராஜேஷ்
லிலோத்தியா அவர்களின் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகிற 8 ஆம் தேதி
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த
முனையக் கட்டிடத்தை (முதல்பகுதி) தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடியை
கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டி எஸ்.சி.துறை முடிவெடுத்துள்ளது. இதில் காங்கிரஸ் பேரியக்க முன்னணி
தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர், முன்னணி அமைப்புகள்,
துறைகள் மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க தோழர்கள்
கலந்துகொள்ள உள்ளார்கள்
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் இந்திய மக்களையும், குறிப்பாக தமிழக
மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு நமது எதிர்ப்பை
பதிவு செய்வது மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் வருங்கால பிரதமர், நம் அருமை
தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அன்பையும்,
ஆதரவையும் உணர்த்தும் விதத்திலும் இந்த போராட்டம் வெற்றிபெற வழிவகை
செய்யவேண்டும் என காங்கிரஸ் பேரியக்க நண்பர்களை
அன்போடு
கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரஞ்சன் குமார் அந்த அறிக்கையில் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று காலை வள்ளுவர் கோட்டத்தின் முன்பு காங்கிரஸ் எஸ்சி பிரிவு தொண்டர்கள் கூடியுள்ளனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது